மாரியம்மன் திருக்கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
டிச-11
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி திருமதி ஆர்.பி.கே. ராஜேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு பாத்தியம்மானதும் அவர்களின் நிர்வாகத்திற்கு உள்ளாதுமான
ராமநாதபுரம் மாநகரில் அமைந்துள்ள அருள் தரும் மாரியம்மன் திருக்கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 13.12.21.தேதி மிக விமரிசையாக நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் கால யாகசாலை பூஜை இன்று ஆரம்பமானது இதற்கான ஏற்பாட்டினை திவான் திரு. பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார். இந்த பூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சர்வ சாதகத்தை சிவஸ்ரீ சந்திரசேகர குருக்கள் ஆதிரத்தினேஸ்வரர் ஆலயமிராசு அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் திருவாடானை, செய்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு