கிருஷ்ணகிரியில் கடையில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல்

 கிருஷ்ணகிரியில் கடையில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல்



கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் கபிலனுக்கு  கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை வஸ்து ஹான்ஸ் பான்பராக் குட்கா ஆகியவை பதுக்கி விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில்

காவல் ஆய்வாளர் கபிலன் உதவி ஆய்வாளர் சிவாசந்தர். மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி டிடிடிசி பில்டிங் பகுதியில் உள்ள அனுமான் ஸ்டோர் என்கின்ற கடையில் திடீரென சோதனை செய்தனர். அப்போது கடையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  மதிப்பிலான ஹான்ஸ். பான்பராக் .குட்கா. போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது

இதையடுத்து கடை உரிமையாளர்

 மங்கள்ராம். வயது 25. மகேந்திரகுமார் வயது 21 ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை ஒத்துக் கொண்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் லட்சத்து 50ஆயிரம் மதிப்பிலான ஆன்ஸ் பான்பராக். குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜாஸ்ரீ தெரிவிக்கையில் அரசால்தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ் பான்பராக் குட்கா போன்றவற்றை கடவர் மீதும் பதுக்கி விற்பனை செய்பவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
மூர்த்தி