தனியார் பள்ளிகள் சொத்து வரி கட்ட வேண்டாம்...
டெல்லி உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தனியார் பள்ளிகள் மட்டும் சொத்து வரி கட்ட வேண்டும் என்று தமிழக அரசு போட்ட உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவும் நீதிமன்ற தீர்ப்பும் பெற்று மீண்டும் தமிழக அரசு தனியார் பள்ளிகள் மட்டும் சொத்து வரி கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டது அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளோம். வழக்கு எண்..SLP 23465/2020... நமது வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்று தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதை தமிழக தனியார் பள்ளிகளுக்கு மாநில சங்கம் அனுப்பி உள்ளது.
எனவே தனியார் பள்ளிகள் நடத்தும் நமது சங்க உறுப்பினர்கள் யாரும் அவசரப்பட்டு சொத்து வரி கட்ட வேண்டாம். மாநகராட்சி நகராட்சி ஊராட்சி அலுவலர்கள் யார் வந்து சொத்துவரி கேட்டாலும் இந்த உச்ச நீதிமன்ற ஆணையை காட்டுங்கள். வழக்கு நிலுவையில் இருக்கும்போது சொத்துவரி கேட்டு வற்புறுத்துவதோ பள்ளிக்கு சீல் வைப்பதோ குடிநீர் இணைப்பை துண்டிப்பதோ மின்சார இணைப்பை துண்டிப்பதோ சாக்கடையை அடைப்பு செய்யக் கூடாது...
அதையும் மீறி செய்தால்அதனுடைய புகைப்படம் வீடியோ எடுத்து எனக்கு அனுப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாகும்.
பள்ளி நிர்வாகி யாரும் பயப்பட வேண்டாம். ஜனவரி 21ஆம் தேதி அரசு பதில் தாக்கல் செய்து உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை பொறுத்திருங்கள்..
மாற்று சங்கத்தார் சங்க உறுப்பினராக தவர்கள் இந்த உத்தரவை திருடி பயன்படுத்தினால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களை கேட்டால் நாங்கள் எங்கள் சங்க உறுப்பினர்கள் இல்லை என்று சொல்லிவிடுவோம்... எங்கள் சங்க உறுப்பினர் என்பதற்கு உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் அங்கீகார கடிதம் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அன்புடன் உங்கள் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.