வி.ஏ.ஓ., அலுவலகங்களில் வசதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் வசதி: உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி ஜெய்சங்கர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 

* குருவிகுளம் ஒன்றியம், திருவேங்கடம் தாலுகாவில் 43 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. 

* அரசின் உதவிகள்கோரி விண்ணப்பிக்க செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். 

* குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக்கோரி தென்காசி கலெக்டர், திருவேங்கடம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். 

* நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், 'அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன,' என தெரிவிக்கப்பட்டது.

**நீதிபதிகள் உத்தரவு: **

* மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ.,அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்து திருவேங்கடம் தாசில்தார் உறுதிப்படுத்த வேண்டும், என்றனர்.