உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்புல்லாணி ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் டிச- 12
ராமநாதபுரம் மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்களின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்புல்லாணி ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் இந்த நிகழ்ச்சிமிக சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிரங்குடி ஒன்றியகவுன்சிலர், திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளருமான திரு.R.கோவிந்த மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் திரு.S.புல்லாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.இன்பா ரகு ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
சுகாதார பணியாளர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் அரிசி பையும், காய்கறிகள் கொண்ட பையும் வழங்கி கௌரவித்தார்கள். இதற்கான ஏற்பாட்டினை காஞ்சிரங்குடி ஒன்றிய கவுன்சிலர் திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளருமான ஆர்.கோவிந்த மூர்த்தி மிக அருமையாக செய்திருந்தார். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், ராமநாதபுரம் கிழக்கு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் கோடாங்கி என்ற முனியசாமி, தில்லை ஏந்தல் கவுன்சிலர் கருத்து முத்து,மற்றும் திருப்புல்லானி ஊராட்சி தலைவர் ஆனந்தன், திமுக பிரமுகர் தில்லை ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு