உளவுத்துறை தந்த ரகசிய ரிப்போர்ட் ; அச்சத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

உளவுத்துறை தந்த ரகசிய ரிப்போர்ட் ; அச்சத்தில் முதலமைச்சர் மு. க ஸ்.

நகராட்சி தேர்தல், மழை, வெள்ள பாதிப்பில் மக்களின் மனநிலை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி உளவுத்துறை அளித்திருக்கும் ரிப்போர்ட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சராக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று தற்போது நாட்கள் நகர்ந்து கொண்டே வருகின்றன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம், விலைவாசி உயர்வு, தற்போது மழை, வெள்ள பாதிப்பு,  என  திமுக அரசு தொடர்ந்து பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.

தற்போது டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தியாக வேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் முதல் கட்டமாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இனி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் பாக்கி உள்ளது. கையோடு இந்த தேர்தலை நடத்தினால் வெற்றிகளை அள்ளலாம் என்று திமுக தலைமை நினைத்தது. 

ஆனால் மழை, பெருவெள்ளம்,  மக்கள் பல இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்க, மழை இன்னமும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்களின் மனோநிலை வேறாக இருக்கிறது.

வரலாறு காணாத வகையில் தமிழக மக்களை போட்டு தாக்கி இருக்கும் வடகிழக்கு பருவமழையால் ஏராளமான பாதிப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளதைக கண்கூடாக காண முடிகிறது. அரசிடம் உதவியை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட மக்களும், விவசாயிகளும் காத்து கிடக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு மற்றும் மழை வெள்ள பேரிடர்களில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் யாரும் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தை எடுத்துக் கொள்ளும்போது அவர்கள் செய்ததில் கால்பகுதி அளவு கூட இவர்கள் செய்யவில்லை என்கிற பேச்சு பரவலாக கேட்க முடிகின்றது.

அதே நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க தொகை இல்லாதது மக்களை வெகுவாய் அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி கொரோனா சூழல், மழை, வெள்ள பாதிப்பு என இரண்டும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கி உள்ளதாக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை முதல்வரிடம் அளித்துள்ளதாம்.

அதில் முக்கியமான சில விஷயங்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறதாம். கொரோனா பரவல் குறைந்திருந்த போதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் இருக்கின்றனர் இப்போது மழை, பெரு வெள்ளம் போட்டு தாக்க.. ஒட்டுமொத்தமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனராம்.

ஆகையால் டிசம்பர் மாதம் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் மனநிலை பிரதிபலிக்கும் என்று உளவுத்துறை கூறி உள்ளதாம். அதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் தீவிர யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. உளவுத்துறை அறிக்கை பற்றி கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தீவிர யோசிக்க ஆரம்பித்துவிட்டனராம்.

மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்குவது, வெள்ள நிவாரண பணிகளை முடுக்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவது, உள்ளாட்சி தேர்தல் என முக்கோண பிரச்னைகளை ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது எதிர்கொண்டு உள்ளது.

இந்த நேரத்தில் தேர்தல் நடத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக தோற்கும் என்கிற அச்சம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது.