பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை....?!

பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை....?!


பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். 

இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை என்றாலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வை வரும் 17ஆம் தேதி தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 

17ஆம் தேதி தமிழ், 

18ஆம் தேதி ஆங்கிலம், 

20ஆம் தேதி கணிதம், 

21ஆம் தேதி விருப்ப பாடம், 

22ஆம் தேதி அறிவியல், 

23ஆம் தேதி தொழிற்கல்வி பாடம், 

24ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

அதபோல 12ஆம் அதே போல வகுப்பு மாணவர்களுக்கு 

17ஆம் தேதி தமிழ், 

18ஆம் தேதி ஆங்கிலம், 

20ஆம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், 

21ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 

22ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை,

23ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, 

24ஆம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அல்லாமல் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பினருக்கு நேரடி வகுப்புகளை தொடங்க வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் அரசு இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.