காங்கிரஸ் தலைவர் பதவி உங்க அப்பன் வீட்டு சொத்தா....? ராகுல் மீது பாய்ந்த பிரசாந்த் கிஷோர்..
காங்கிரஸ் தலைவர் பதவி என்பது எந்த தனிப்பட்ட நபருக்கும் உரிமையானதல்ல" பிரஷாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துக்கு, கரூர் எம்பி ஜோதிமணி காரசாரமான ட்வீட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2 வருடத்துக்கும் மேலாகவே, காங்கிரஸ் பொறுப்பை ஏற்காமல் ராகுல்காந்தி ஒதுங்கி வருகிறார்.. மூத்த தலைவர்கள் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள்..
சோனியாவுக்கும் உடம்பு சரியில்லை.. ஒரு தேசிய கட்சி 3 வருஷமாக தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.. இன்னொரு பக்கம் இது பாஜகவுக்கு தெம்பை தந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், 2024-ம் ஆண்டில் நடக்க போகும் எம்பி தேர்தலுக்கு இப்போதே, தேசிய அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடந்த 6 மாதங்களாகவே ஈடுபட்டு வருகிறார்... இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசிவருகிறார்.. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களையும் தங்கள் கட்சி பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மம்தா மும்முரமாகி வருகிறார்..
அதன்படியே அஸ்ஸாம், கோவா மாநிலங்களில், பல சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.. இனி காங்கிரஸை நம்பினால் இனி வேலைக்கு ஆகாது என்று நினைத்து தனித்த நபராகவே பாஜகவிடம் மோத முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இவ்வளவுக்கும் பக்கபலமாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இருந்து வருவதை மறுக்க முடியாது.
சில மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேருவதாக இருந்ததாகவும், ஆனால், பிரசாந்த் கிஷோர் வருகையை ராகுல் காந்தி விரும்பவில்லை என்றும் தகவல்கள் கசிந்தன.. அதனாலேயே காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரவில்லை என்றும் முணுமுணுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பிரசாந்த் கிஷோர் திடீரென ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், கட்சி தலைமை பொறுப்பையும் ஏற்று கொள்ளாமல், புதிய தலைவரையும் நியமிக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை தவித்து கொண்டிருப்பது பலவீனமாகி வருவதையே சுட்டிக் காட்டி இருந்தார்.
"காங்கிரஸ் தலைவர் பதவி என்பது யாருடைய புனிதமான உரிமையும் கிடையாது.. ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக திகழ்வதற்கு தேவையான அம்சங்களை காங்கிரஸ் பெற்றிருக்க வேண்டும்... அதன் தலைமையும் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 வருஷமாகவே நடந்த தேர்தல்களில் 90 சதவீத தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ்" என்று பதிவிட்டிருந்தார். ராகுல்காந்தியைதான் பிரசாந்த் கிஷோர் இப்படி மறைமுகமாக அட்டாக் செய்வதாக அப்பட்டமாகவே தெரிந்தது. இதனால் பிரசாந்த் கிஷோரின் கருத்து, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்... இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "எங்கள் தலைவரை காங்கிரஸ் தொண்டர்கள் தேர்வு செய்துகொள்வோம். எங்கள் கட்சிக்காகவும், இந்த நாட்டுக்காகவும் தியாகம் செய்தவர்கள் யார் என நாங்கள் அறிவோம்.
காங்கிரஸை வீழ்த்துவதற்கு பாஜகவுடன் சேர்ந்து வேலைசெய்தவர் நீங்கள்தான்... காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்" என்று காட்டமாக பதிலடி தந்துள்ளார்.