எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் சார்பில் பெட்ரோல், எரிவாயு,டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் சார்பில் பெட்ரோல், எரிவாயு,டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் நவ- 30

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்       எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் சார்பில் பெட்ரோல், எரிவாயு,டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் காதர் கனி தலைமையில் நடைபெற்றது.எஸ்.

டிபிஐ. கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகவை அப்துல் ஜமீல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் தொகுதித்தலைவர் எஸ்டிபிஐ கட்சியின் பீர் மைதீன் கண்டன கோஷம் எழுப்பினார். மாவட்ட இணைச் செயலாளர் இப்ராஹிம் சாஹிப் மாவட்ட துணைத்தலைவர் எஸ்டிடியு அப்துல் ரஹ்மான், எஸ்டிபிஐ கட்சி நகர தலைவர் ஹமீது பைசல், ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மாவட்ட இணைச்செயலாளர் முஹம்மது பாக்கர் எஸ்டிடியு (தொழிற்சங்கம்) நன்றியுரை கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.டியு தொழிற்சங்கத்தினர், எஸ்டிபிஐ கட்சியினர் பி.எப்.ஐ.மற்றும் ஐயூஎம்எல்.அ.ம.மு.க நிர்வாகிகளும், ஏராளமான தொழில சங்கம் நிர்வாகிகளும், ஆட்டோ ஓட்டுனர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு