மரகத நடராஜர் பெருமானுக்கும் சந்தனம் கலையும் நிகழ்ச்சி

மரகத நடராஜர் பெருமானுக்கும் சந்தனம் கலையும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் டிச- 20

ராமநாதபுரம் மாவட்டம் அருள்மிகு உத்திரகோசமங்கை மரகத நடராஜர் பெருமானுக்கும் சந்தனம் கலையும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி சேதுராஜன் முத்துலட்சுமி அவர்களின் இல்லத்தில் வைத்து 5-ம் ஆண்டு ஐவர் குழு சார்பில் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அன்னதானம் சுமார் 3,000 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை எஸ். ரமேஷ்,பாலா ராம்குமார், S.பாலமுருகன், M.முருகேசன், கே. பாண்டி,விக்னேஷ், தில்லை சந்திரன், சேது, ஆகியோர் மிக அருமையாக செய்திருந்தனர்' புளியோதரை சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், உள்ளிட்ட ஆரஞ்சு பழத்துடன் குடிநீருடன் வருகை தந்த பக்தர்களுக்கு மிக அருமையாக சுவையான உணவு வழங்கப்பட்டது. ஆருத்ரா தரிசன ஏற்பாட்டினை சேதுபதி ராணி பரம்பரை தர்மகர்த்தா திருமதி. R.B.K. ராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள், திவான் மற்றும் நிர்வாக செயலாளர் திரு.வி.கே. பழனிவேல் பாண்டியன் ஆகியோர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு