ராமநாதபுரத்தில் அஇ அதிமுக கழக அமைப்புத் தேர்தல்

ராமநாதபுரத்தில் அஇ அதிமுக கழக அமைப்புத் தேர்தல்


 ராமநாதபுரம் டிச-22

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் அஇ அதிமுக கழக அமைப்புத் தேர்தல் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் ராமநாதபுரம் ஏபிசி மைதீன் மஹாலில் நடைபெற்றது. இதில் அமைப்பு தேர்தல் ஆணையாளர் சிவகாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஆணையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவருமான சிவகாசி V.லட்சுமி நாராயணன் விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் K.A. தெய்வம்,விருதுநகர் .மேற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் S.P. யுவராஜ் , ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சிங் பிரபு, அம்மா பேரவை செந்தில்பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் M.S.தர்வேஸ், வழக்கறிஞர் பிரிவு K.N.கருணாகரன், M.மோகன்பாபு, செயற்குழு உறுப்பினர் செளந்தரவள்ளி, மாவட்ட M.G.R மன்ற துணை செயலாளர் மாரியப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அ.இ.அதிமுகவினர்

போட்டியிட விருப்ப மனுக்களை போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பார்வையாளரிடம் தங்களின் வேட்புமனுக்களை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாட்டினை மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும், மண்டபம் ஒன்றிய கவுன்சிலருமான R.G.மருதுபாண்டியன் செய்திருந்தார். தேர்தல் நடைபெறுவதை முன்னாள் அமைச்சர் Dr.மணிகண்டன் அவர்கள் பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு