கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கள்ளகுறிச்சி மாவட்டபூசாரிகள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்

 கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கள்ளகுறிச்சி மாவட்டபூசாரிகள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*நாள்: 01-12-2021*

*நேரம்:காலை 12மணி*

புதன்கிழமை (பிலவ  வருடம்) 

*இடம்:* பெத்தானூர் சின்னசேலம் வட்டம், கள்ளகுறிச்சி மாவட்டம்..

*தலைமையேற்று சிறப்புரை :-*

   P.வாசு பூசாரி மாநிலத் தலைவர் அவர்கள், கோவில் பூசாரிகள் நலச்சங்கம்

🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸

*'தெய்வம் நின்று கொடுக்கும் அரசர் அன்றே கொடுப்பார்'*

_பூசாரி பெருமக்களே  வணக்கம் 🙏_

சேலத்தை தலைமை இடமாகக் கொண்டகோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்* அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு தலைமை p. வாசு மாநிலதலைவர்,சின்ன சேலம் ஒன்றிய தலைவர் குமரேசன், மாவட்ட தலைவர் G.பழனி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் 

P.கணேசன் உள்ளிட்டோர் இக்கூட்டத்திற்க்கு முன்னிலை வகிக்கித்தனர்.

வாழ்த்துரை: பெத்தானூர் ஊராட்சி மன்ற தலைவர் V.S.அருள்மணி , முன்னாள் தலைவர் வாசு தேவன் பெத்தானூர்..

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் கோரிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து, சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், அக்கோரிக்கைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

♾️♾️♾️🌸🌸🌸♾️♾️♾️

பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ4000 ஆக உயர்த்தியது, ஒருகால பூஜை நடைபெறும் திருக்கோவில்களில் பணியாற்றிவரும் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோருக்கு மாத *ஊக்கத்தொகை ரூ. 1000* வழங்கி வருவது, ஒரு கால பூஜை நடைபெற்றுவரும் திருக்கோவில்களுக்கான வைப்பு நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தியது, ஆதிதிராவிடர்  வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோவில்களுக்கான *திருப்பணி நிதியை ரூ. 2 லட்சமாக* உயர்த்தியது, தமிழக திருக்கோவில்கள் அனைத்திலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை முறையை நடைமுறைப்படுத்தியது,  சமூக நீதியை நிலை நாட்டும் வகையில்  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது, எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் நன்றி தெரிவிக்கும் கூட்டம்

💠💠💠💠💠💠💠💠

இக்கூட்டத்தில் அனைத்து பூசாரிகளும் மற்றும் பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் 70முதிய பூசாரிகளுக்கு ஓய்வூதிய விண்ணப்பம் பூர்த்திசெய்து வழங்கபட்டது.. 

பூசாரி நலவாரியத்தில்  உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வழங்கபட்டது Online ல் விண்ணப்பம் செய்யும் செய்முறை விளக்கம் அளிக்கபட்டது, வீட்டுமனை இல்லாத பூசாரிகள் வீட்டுமனை வேண்டியும் கிராமப்புற திருப்பணி நிதி வேண்டி விண்ணப்பம் தமிழக முதல்வருக்கு அனுப்ப பூசாரிகளுக்கு விண்ணப்பம் வழங்கபட்டது..

தமிழக முதல்வருக்கு  உறுதுணையாகச் செயல்பட பூசாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் உறுதியேற்போம். 

இக்கூட்டத்திற்கு வருகை தந்த பூசாரிகளுக்கு முத்துகண்ணு நன்றி தெரிவித்தார்..

இங்ஙனம்

_*கோவில் பூசாரிகள் நலச் சங்கம் கள்ளகுறிச்சி மாவட்டம்*_

தேதி: 1/12/2021