பள்ளிக்கு மைதானம் அமைத்து தரவேண்டியும் மனு
டிச-22
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகிலுள்ள தெற்கு தரவை ஊராட்சி, அம்மன் கோவில் கிராமத்தைசேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் அவர்களிடம் தெற்குத் தரவை ஊராட்சித்தலைவர் சாந்தி சாத்தையா, அம்மன் கோவில் கிராமத் தலைவர் S.கதிரேசன் ஆகியோர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அன்று, தனி நபர் மோசடியாக பள்ளி நிலத்தை மாற்றியுள்ளதை ரத்து செய்து தரமனு அளித்தனர்.
மனுவில் கூறி இருப்பதாவது:-
அம்மன் கோவில் கிராமத்தில் அரசு பள்ளி, சுகாதார நிலையம் உள்ள பள்ளி நிலத்தை மோசடியாக தனிநபருக்கு பட்டா மாற்றியதைரத்து செய்து தரவும், மீண்டும் பள்ளிக்கு மைதானம் அமைத்து தரவேண்டியும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு