ஹைதராபாத்தில் நடைபெறும்இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக ஆசிரியர் இயக்கங்கள் பங்கேற்பு


ஹைதராபாத்தில் நடைபெறும்இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில்  தமிழக ஆசிரியர் இயக்கங்கள் பங்கேற்பு


இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய தலைமை நிர்வாகிகள் கூட்டமும், தேசிய செயற்குழு கூட்டமும் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் ஹிமாயத் நகர் சென்னுபட்டிபவனத்தில் டிசம்பர் 15 மற்றும் 16 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 

இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர்  செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

தேசிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்குகிறார்.  தேசிய பொதுச்செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி, இணை பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி, ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  தேசிய துணைத்தலைவர்கள் கே.ராஜேந்திரன், எஸ்.மயில், செயலாளர் கே.பி.ஓ.சுரேஷ் ஆகியோர் உள்பட பலர் கருத்துரையாற்றுகின்றனர். தமிழ்நாட்டினை சார்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அ.மாயவன், செ.நா.ஜனார்த்தனன், எ.சங்கர், பி.பேட்ரிக்ரெய்மன்ட், சிவஶ்ரீரமேஷ், டி.உதயசூரியன், ரவிச்சந்திரன், சி.முருகன், ஆகியோர் உள்பட பல்வேறு மாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் பேசுகின்றனர். 

பின்னர் தேசிய செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் விஜயாவாடாவில்  8வது தேசிய மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பது.  

தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாடு நடத்துவது.

தேசிய அளவில் ஆசிரியர்களின் பிரச்சனைகள் அதனை தீர்பதற்கு மேற்கொள்ள வேண்டிய இயக்க செயல்பாடுகள், நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் 2021-22ஆம் கல்வி ஆண்டின் திட்டமிடல் உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதம் நடைபெற உள்ளது. 

புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.

இந்த கூட்டத்தில் டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, அஸ்ஸாம், பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேசம், மேற்குவங்கம், ஓடிசா, ஹரியானா, ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, பஞ்சாப், பிகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, உள்ளிட்ட 25 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்ககங்களின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.  தேசிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற கோருவது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்து பழை ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்த கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழகத்தின் சார்பில் பின்வரும் சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்

1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, 

2. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்

3. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

4. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்

5. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்

6. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

7. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம்

8. தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு

9. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்


செ.மயில் செ.நா.ஜனார்த்தனன்

மாநில ஒருங்கிணைப்பாளர்

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்

 :9442079402 :9443345667