ராமநாதபுரம் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில்விருப்ப மனு
ராமநாதபுரம் டிச-02
தமிழ்நாட்டில் அதிவிரைவில். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விருப்ப மனு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் விருப்ப மனு வழங்கப்பட்டது. இதில் ராமேஸ்வரம் ராமநாதபுரம் திருவாடனை முதுகுளத்தூர் உள்ளிட்ட தாலூகாகளிலிருந்து காங்கிரஸ் சார்பில் வருகை தந்து தாங்கள் போட்டியிடும் வார்டுகளுக்கு விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, விருப்பமனுவை உறுப்பினர்களான, மருத்துவர்.பிலு லால்சிங்,அடையாறு பாஸ்கர், திருப்புல்லாணி வட்டாரத் தலைவர் சேதுபாண்டியன், தேசிய மீனவர் அணி தலைவர் பாம்பன் ஆம்ஸ்ட்ராங், ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சித் துணைத் தலைவர் மாவீரன் வேல்ச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் முத்து கிருஷ்ணன்,மாவட்ட மகளிரணி தலைவி ராமலட்சுமி,மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ராஜன்,உள்ளிட்டோர் இந்த விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஏழு பேரூராட்சிகள் நான்கு நகராட்சிகள் உள்ளிட்ட வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தம் 84 பேர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, நிருபர்களிடம் கூறும்போது :- 7 பேரூராட்சிகளிலும் நான்கு நகராட்சிகளிலும் மொத்தம் 84பேர் போட்டியிட விருப்ப மனுவை கொடுத்துள்ளார்கள். 7 பேரூராட்சிகளிலும் 4 நகராட்சிகளிலும் எங்களுக்கு கொடுக்கக்கூடிய வார்டுகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொள்கிறேன். இந்த வெற்றியை மாநிலத் தலைவர் அழகிரியிடம் சமர்ப்பிப்பேன் என்று அவர் கூறினார். மாவட்ட துணைத்தலைவர் துல் கீப், வட்டாரத் தலைவர் அன்வர் நத்தார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு