உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

ராமநாதபுரம் நவ-28

ராமநாதபுரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் சார்பில் நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 2ம்தேதி பிறந்தநாள் காணும் இளைய சூரியன் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்கள் மற்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்                திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று காலை ராமநாதபுரம் அண்ணாசிலை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர்.பிகே. பாபு தலைமையில் மாநில பொருளாளர் பொறியாளர் ஏ.ராஜா அவர்கள், மாநிலத் துணைச் செயலாளர் பர்மா ரூபன் அவர்கள் முன்னிலையிலும் மாவட்ட செயலாளர் ஜி.மகேந்திரன் மாவட்ட பொருளாளர் ஆர்.எஸ்.சதீஸ்குமார்

ஆகியோர் முன்னிலையில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழாவின் சிறப்புரையை  ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் மிக அருமையாக சிறப்புரையாற்றினார்.மாவட்ட தலைவர் திரு.ஆர்.கே.கே.கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார்.


இதில் மாவட்ட துணைத்தலைவர் வசந்தகுமார்,மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் பாண்டியன், மாவட்ட துணை பொருளாளர் அர்ஜுன்,மாவட்ட துணைத்தலைவர் சசி கண்ணன்,மாவட்ட துணைச் செயலாளர் ராம்குமார்,மாவட்ட துணை பொருளாளர் நம்பி,மாவட்ட துணை தலைவர் பிரதீப் பழனிவேல்,மாவட்ட துணைச் செயலாளர் மோகன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பரமக்குடி ஒன்றிய தலைவர் எம். துரைமுருகன் நன்றி யுரையாற்ற நிகழ்ச்சி இனிதே முடிந்தது. இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட ஒன்றிய,நகர,பேரூர், கழக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் மிக அருமையாக செய்திருந்தனர். இதில் பயனாளிகளுக்கு, அரிசி, சூர்யா ஸ்டவ், அடுப்புகள், குக்கர், அயன்பாக்ஸ்,  மளிகைப்பொருட்கள் ஆகியவை நலத் திட்ட உதவியாக  வழங்கப்பட்டது. முன்னதாக 44 கிலோ எடை கொண்ட இனிமையான பிறந்தநாள் கேக்கை M.L.A.காதர்பாட்சா முத்துராமலிங்கம் வெட்டி வருகை தந்த பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் R.K.K.கார்த்திக்கின் மகளுக்கு தமிழ்ச்செல்வி என்று பெயர் சூட்டி உச்சி முகந்தார். இதில் ராமநாதபுரம் (வடக்கு) செயலாளர் R.K.கார்மேகம், T.R.பிரவீன் தங்கம்(தெற்கு), தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், அஹமது தம்பி,தொழில் அதிபர் N.P.T. ராஜா, சூரங்கோட்டை ஊராட்சி தலைவர் தெய்வநாதன், 22வது வார்டு செயலாளர் ஆஸ்டின் திரவியம் உள்ளிட்ட, திமுக நிர்வாகிகள், நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு