அல்ஹாஜ் கே.சீனி பக்கீர் மறைந்ததையொட்டி நினைவுகூறும் 7ஆம் நாள்பாத்திஹா நிகழ்ச்சி

அல்ஹாஜ் கே.சீனி பக்கீர் மறைந்ததையொட்டி நினைவுகூறும் 7ஆம் நாள்பாத்திஹா நிகழ்ச்சி

ராமநாதபுரம் டிச- 19

ஏழாம் நாள் பாத்திஹா வபாத்தான ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பாசிப்பட்டறை முஸ்லிம் ஜமாத் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்களின் டிரஸ்ட்டிகளில் ஒருவரான அல்ஹாஜ் கே.சீனி பக்கீர் மறைந்ததையொட்டி நினைவுகூறும் 7ஆம் நாள்பாத்திஹா நிகழ்ச்சி பாசிப்பட்டறை ஜீம்மா பள்ளியில் நடைபெற்றது. இவர்சிறந்த நிர்வாகியாக,சிறந்த குடும்பத் தலைவராக, ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாக உலமா பெருமக்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். மார்க்கம் மார்க்க சம்பந்தமாக நூல்கள் உருவாவதற்கு வாரி வழங்கிய வள்ளலாகத் திகழ்ந்தார்.அவரை நினைவுகூரும் விதமாக நபிகள் நாயகம் சொன்ன ஹதீசுக்கு இணங்க இன்று நினைவு கூறப்பட்டது.உங்க மரணித்தவர்களின் நன்செயல்களை நினைவுகூறுங்கள் என்றார்.இந்த நிகழ்ச்சி ஜும்மா நாளான வெள்ளிக்கிழமை அன்று மேனேஜிங் டிரஸ்டி ஹாஜி அஷ்ரப் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மூத்த நிர்வாகி ஹாஜி காதர்முகைதீன் அவர்கள், டிரஸ்டி ஹாஜி.ஜபருல்லா,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இதில் ஹாஜி உஸ்மான் அலி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஹாஜி ஷாஜகான் அவர்கள்உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு