தேவிப்பட்டினத்தில் தேசத் தந்தை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 65 ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி

தேவிப்பட்டினத்தில் தேசத் தந்தை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின்  65 ம் ஆண்டு நினைவு  நிகழ்ச்சி

 ராமநாதபுரம் டிச- 19

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் தேசத் தந்தை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின்  65 ம் ஆண்டு நினைவு மற்றும் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர்.பிரசாத் அவர்கள்  தலைமை மருத்துவமனை  ராமநாதபுரம்  தலைமை ஏற்று நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு வணிகவரி உதவி ஆணையாளர் மற்றும் எஸ்சிஎஸ்டி மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு நிறுவனர் எஸ். கருப்பையா அவர்கள், மற்றும் தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஜாகீர்உசேன் பெரியார் பேரவைத் தலைவர் நாகேஸ்வரன், டிஆர்ஓ பணி நிறைவு முனியசாமி, இளநிலை பொறியாளர் பணி நிறைவு எஸ்.கேசவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகம்மது யாசின், மற்றும் ஜலால் நெடுஞ்சாலைத்துறை, உள்ளிட்டோர், நினைவு நாள் உரை நிகழ்த்தினார்கள். முன்னதாக மேடையில் இருந்த டாக்டர் அம்பேத்கரின்  படத்திற்கு வணிகவரி உதவி ஆணையாளர் கருப்பையா அவர்கள், மருத்துவர் பிரசாத் உள்ளிட்ட வருகை தந்த முக்கிய பிரமுகர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக சிறுவர்,சிறுவர்களின்  சிலம்பாட்டகலை, மற்றும் பறை இசைகலைஞர்களின் கலை நிகழ்ச்சி மேடையில் வைத்து விமரிசையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு