உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
டிச-12
ராமநாதபுரம் மாவட்டம் தி..மு.க சார்பில் திருப்புல்லாணி ஒன்றியம், திருப்புல்லாணியில் மக்கள் அன்பன் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு
இன்று காலை மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திருப்புல்லாணி கிழக்கு மாவட்ட கவுன்சிலரும் ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு பேரவைத் தலைவருமான கே.ஆதித்தன் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் துவக்கி வைத்தார்.இதில் வெற்றி பெற்ற வட மாடுகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசினை சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழங்கி கௌரவித்தார்.இதில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, திருப்புல்லானி ஒன்றிய பெருந்தலைவர் S.புல்லாணி, முன்னிலை வகித்தார். இதில் திருப்புல்லாணி ஆனந்தம், மாவட்ட கவுன்சிலர் கதிரவன், மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ஏராளமான அதிமுகவினர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், Ex. RDO, குணசேகரன், ராமநாதபுரம் செயலாளர் (வடக்கு) K.கார்மேகம் ராமநாதபுரம் டி.ஆர். பிரவீன் தங்கம்(தெற்கு), காஞ்சிரங்குடி
ஒன்றிய கவுன்சிலர் திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு