கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
ராமநாதபுரம் டிச- 02
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் நேற்று காலை தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த திருநாவுக்கரசு ( வயது 43) என்பவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ள திருநாவுக்கரசு உடலை வாங்க மறுத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு மதுரை (ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்) அமர்ந்து சாலை மறியலில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர்,தாசில்தார் ரவிச்சந்திரன், ஏ.டி.எஸ்.பி ஜெய்சிங், டி.எஸ்.பி ராஜா ஆகியோர பேச்சுவார்த்தை நடத்தி, வருகின்றனர் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் 1) தவறு செய்தவர் களை கண்டு பிடித்து
கைது செய்ய வேண்டும், ( 2)வன்கொடுமை சட்டத்தின் கீழ் FlRல் பதிவு செய்ய வேண்டும், (3) இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு