நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 3 ஏக்கர் நிலம் கேட்கக்கூடாது திருவள்ளூர் மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 3 ஏக்கர் நிலம் கேட்கக்கூடாது திருவள்ளூர் மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்  ரெட்டில்ஸ் சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பேராசிரியர் A.கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் டாக்டர். A. ராஜன் முன்னிலைவகித்தார். மாவட்ட செயலாளர் முனைவர்  மணிவண்ணன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சங்கத் தலைவர்கள் ஜெரால்டு பின்னி, உமா கண்ணன், கிரீன் ஃபீல்ட் ரங்கநாதன்.  கலைவாணி கணேசன், அருள்தாஸ், ராஜேந்திரன், சிவந்தி ஆதித்தன் பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள். மாநில சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர்கே. ஆர்.நந்தகுமார் சிறப்புரையாற்றினார்

 தனியார் பள்ளிகள்  சொத்து வரி கட்ட வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியும்  போராடியும் வருகிறோம்.

 100% RTE கல்வி கட்டணம் வழங்கக்கோரியும்...

 கல்வி கட்டண நிர்ணயக் குழு நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரியும்,

 ஆசிரியர்கள்  தொழிலாளர்கள் அல்ல எனவே இஎஸ்ஐ கட்ட வேண்டாம் என்றும்

 அனைவருக்கும் உடனடி தொடர் அங்கீகாரம் வழங்கவும், நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகதரம் உயர்த்த வேண்டும். நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 3 ஏக்கர் நிலம் கேட்கக்கூடாது என்றும், அங்கீகாரம்  பெற்று 10 ஆண்டுகள் ஆன பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் எனும் அரசாணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது...

 ஜனவரி மாதம் முதல் 100 சதவீதம் கல்வி கட்டணம் வசூலிக்க அரசு ஆணையிட வேண்டும். அரசாணை வெளியிட மறுத்தால் நீதிமன்றம் சென்று உரிய நீதியை பெற  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது என்றும்  முடிவு செய்யப்பட்டது...

 தனியார் பள்ளி வாகனங்களுக்கு உடனடியாக வேக கட்டுப்பாட்டு கருவி சிசிடிவி கேமரா ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த வேண்டும் அதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சரை மாநில தலைமை நேரில் சென்று பேசி நல்லதொரு முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

வழக்கிற்கான செலவுகளை பள்ளி நிர்வாகிகள் பகிர்ந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 சிமியோன் நன்றி கூறினார்.