மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1500 பராமரிப்புத் தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1500 பராமரிப்புத் தொகை

ராமநாதபுரம் டிச-30

ராமநாதபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் 4715 பயனாளிகள் மாதந்தோறும் தலா ரூபாய் 1500  பராமரிப்பு உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். என்று போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆர்எஸ் ராஜகண்ணப்பன் அவர்கள் பேச்சு டாக்டர் கலைஞர் அவர்கள் ஊனமுற்றவர்கள் என்று அழைக்கப்பட்டு வந்ததை மாற்றுத்திறனாளிகள் என்று மாற்றித் தந்தார் இதில் 73 பயனாளிகளுக்கு ரூபாய் 2414 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு படையின் சார்பில் குழந்தைகள் பெற்றோரை இழந்து 5 குழந்தைகளுக்கு நிவாரண நிதியாக தலா ரூபாய் 3 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 15 லட்சத்திற்கான நிர்வாக அனுமதி ஆணைகளையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சங்கர்லால் குமார் முன்னிலை வைத்தார்கள். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இதில் பரமக்குடி எம்எல்ஏ செ. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு