அனைவருக்கும் RTE கட்டண பாக்கியை உடனே வழங்கிட கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் TGI கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இன்றைய பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில்
அனைவருக்கும் RTE கட்டண பாக்கியை உடனே வழங்கிட கோரி பள்ளிக் கல்வி இயக்குனர் SSA அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் டி. இ. ஓ அலுவலகங்களில் பள்ளி நிர்வாகிகளை மரியாதை குறைவாக நடத்துவதைகைவிட வேண்டும் அங்கீகார கோப்புகளை காரணமின்றி நிறுத்தக்கூடாது கண்டதற்கெல்லாம் பணம் கேட்கக் கூடாது.
ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர் மூலம் அதிக பட்சமாக லஞ்சம் கேட்பது கைவிட வேண்டும்
அனைத்து வட்டாட்சியர் தீயணைப்புத் துறை அலுவலர் சுகாதாரத்துறை ஆய்வாளர் தொழிலாளர் நலத் துறை அலுவலர்களை நமது சங்க தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் நேரடியாக சென்று பேசி நமது சங்கத்தின் வலிமையை உறுதி செய்து வருங்காலங்களில் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முடிவை நாம் அறிவிக்க வேண்டும்.
டி.சி இல்லாமல் எந்த மாணவனையும் எந்தப் பள்ளியிலும் சேர்க்கக்கூடாது. பணம் பாக்கி உள்ளவர்களுக்கு டீசி தரக் கூடாது.
தனியார் பள்ளி மாணவர்களின் EMIS No கல்வித்துறை அதிகாரிகள் திருடக்கூடாது என்கிற உறுதியான முடிவை நாம் அனைவரும்மேற்கொண்டாக வேண்டும் என்கிற தீர்மானத்துடன்
நியாயமான கல்வி கட்டணம் கிடைக்கும்வரை கல்வி கட்டணத்திற்கு விண்ணப்பிக்கமல் அடுத்த ஆண்டு விண்ணபிக்க முடிவு செய்யப்பட்டது.
பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பறிக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மேல் அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்வது என்றும் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நமது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்கே ஆர் நந்தகுமார் அவர்கள கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்திற்கு Adwaid International பள்ளி நிர்வாகி அஸ்வத் நாராயணன் அவர்களைத் மாவட்டதலைவராகக் கொண்டு புதிய நிர்வாகிகளாக ஜெயராம் ரெட்டி வழக்கறிஞர் பால், கிருஷ்ணா ரெட்டி, சம்பத்குமார், லட்சுமிபதி, பிருந்தாவன் சேகர், மோகன்சுந்தர்,நாகராஜன், நரேந்திரன், கிறிஸ்டோபர், சரவணகுமார், சிஎஸ்ஐ சார்லஸ் ஞானசேகர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட அனைவராலும் வாழ்த்துக் கூறப்பட்டது..
அன்னை பள்ளி நிர்வாகி ராஜ்குமார் நன்றி கூறினார்.