ராமநாதபுரம் M.L.A.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களிடம் விருப்பமனு
நவ-20
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு அதி விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி திமுக தலைமை கழகத்தின் ஆணையின்படி இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு வேட்பு மனு அளிக்கப்பட்டது. இதில் முதலாவதாக ராமநாதபுரம் நகராட்சி 5வது வார்டுக்கு போட்டியிட முன்னாள் எம்பி திருமதி.பவானி ராஜேந்திரனின் மகனும், ராமநாதபுரம் பல்மருத்துவருமான டாக்டர். எம்.எஸ்.கே. ஈஸ்வர பிரசாத் விருப்பமனு பெற்றுக்கொண்டார். ராமநாதபுரம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு Ex. கவுன்சிலர் V.முனியசாமி, ராமநாதபுரம் M.L.A.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களிடம் விருப்பமனுவை பெற்றுக்கொண்டார். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் விருப்பமனு பெற்றுக்கொள்ளும் உறுப்பினர்கள் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலர் சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் K.J. பிரவீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா,கீழக்கரை வழக்குறைஞர் ஹமீது சுல்தான், ராமநாதபுரம் நகர் செயலாளர்கள் T.R.பிரவீன் தங்கம்(தெற்கு), R.K.கார்மேகம் (வடக்கு) உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு