ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனை முன்பு நடைபெற்றது..


காலை 11 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அவர்கள் தலைமையில் கழக ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி. கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல் கேரளாவில் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்த திமுக அரசை கண்டித்து மாபெரும் சிறப்பு அழைப்பாளராக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. வி.ஆர்.ராஜ சத்தியன் மற்றும் அ.இ.அதிமுக சிறுபான்மை  நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா Ex. எம்பி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மருது பாண்டியன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொறுப்பாளர் சரவணன், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டி, கழக MGR மன்ற துணைச்செயலாளர் RG ரத்தினம்  மற்றும் அ.இ.அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு