கிருஷ்ணகிரியில் மழை வெள்ளத்தில் வந்த மீன்களை பிடிக்க போட்டி போட்டுகுவிந்த பொதுமக்கள்.

 கிருஷ்ணகிரியில் மழை வெள்ளத்தில் வந்த மீன்களை பிடிக்க போட்டி போட்டுகுவிந்த பொதுமக்கள்.



கிருஷ்ணகிரியில் வடகிழக்கு வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில்

மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளும் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது இந்த நிலையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இப்பகுதியிலுள்ள குட்டைகள் நிரம்பி மழைநீர் சாலை பகுதியில் வர ஆரம்பித்தது பல ஆயிரக்கணக்கான மீன்கள் தண்ணீரில் அடித்து வரவே இதை பார்த்த பொதுமக்கள் மீன் பிடிக்கப் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர்

சிறிய மீன் முதல் 2 முதல் 3 கிலோ மீன் வரை கிடைத்ததாக பொதுமக்கள் கூறினர் அருகிலிருந்த வீடுகளுக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை மீன்களைப் பிடித்து பொதுமக்கள் எடுத்து சென்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது போன்ற பருவ மழை பெய்து  வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும் சம்பவம் ஏற்படுவது பலவருடங்கள் ஆனதால் இந்த நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சரியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.