நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி


 ராமநாதபுரம் நவ-07

SDPI கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமையில் இன்று(07/11/2021) ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்ட செயலாளர் ஆசாத் பொருளாளர் அசன் அலி மற்றும் செயற்குழு உறுப்பினர் நவர்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முழுதாக நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) நஜ்முதீன் தொகுத்து வழங்கினார் செயலாளர் ஹனீப் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், மாநில செயற்குழு உறுப்பினர் Dr.ஜமீலுன் நிஷா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள், மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி கருத்துரை ஆற்றினார், மேற்கு மாவட்ட தலைவர் பரகத்துல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார், கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் நாம் எதற்காக வெற்றி பெற வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பைரோஸ் கான் இலகுவாக வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் அவர்கள் நன்றி உரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றியக் மந்திர தலைவர் அக்பர் ஜான் பீவி, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தொகுதி, நகர் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.  ஜெரினா பானு