கனமழையின் காரணமாக வீடுஇடிந்து விழுந்த குடும்பத்தை சந்தித்து ஆறுதல்

கனமழையின் காரணமாக வீடுஇடிந்து விழுந்த குடும்பத்தை சந்தித்து ஆறுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆத்தூர் ஊராட்சி கோட்டையாம் பாளையம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மணி (எ)முருகன் மற்றும் ரமேஷ்  ஆகியோரின்  கூரை வீடுகள் நேற்றிரவு இடிந்து விழுந்ததில் மணியின் குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் சரஸ்வதி மகேஸ்வரி அஜய்குமார் பரணிதரன் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர். ஊர் பொதுமக்கள் விரைந்து சென்று அவர்களை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறைவன் அருளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தேமுதிகவின் சார்பில் திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திருமுருகன் தலைமையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக துணைச் செயலாளர் அய்யப்பன், ஒன்றிய வழக்கறிஞர் செயலாளர் ஜெய்சங்கர், ஊராட்சி கழக செயலாளர் சக்கரவர்த்தி, கிளை கழக செயலாளர் வேலு மற்றும் செந்தூரப்பாண்டி ஆறுமுகம் ஜெயபிரகாஷ் குமார் முருகன் ராஜா மயில் முருகன் மற்றும் பல நிர்வாகிகள்