பசுமை மேலக்கோட்டை திட்டத்தின்கீழ் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

 பசுமை மேலக்கோட்டை திட்டத்தின்கீழ் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.


ராமநாதபுரம் நவ-21

SDPI கட்சியின் ராமநாதபுரம்(கிழக்கு) மாவட்டம் திருவாடான தெற்கு தொகுதிக்குட்பட்ட மேலக்கோட்டையில், பசுமை மேலக்கோட்டை திட்டத்தின்கீழ் மேலக்கோட்டை முழுவதும் எண்ணற்ற மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது, அதன் தொடர்ச்சியாக இன்று மேலக்கோட்டை கிளைத் தலைவர் அப்துல் முத்தலிப் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் காய்ச்சி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது இதில் ஏராளமான மக்கள் பயன் அடைந்தார்கள்.

இதில் கிளை துணை தலைவர் அல்லா பிச்சை மற்றும் செயல்வீரர் அஸ்லான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு