காங்கிரஸ் கமிட்டி சார்பாக மோடி அரசை கண்டித்து ராமநாதபுரம் நகரில் மாபெரும் பாதயாத்திரை பேரணி
ராமநாதபுரம் நவ-24
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து ராமநாதபுரம் நகரில் மாபெரும் பாதயாத்திரை பேரணி மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை நிறுத்தி வரும் மானியத்தை வழங்கிடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ராஜன், நகர் துணைத் தலைவர் ஜெயக்குமார், வட்டார தலைவர் கோபால், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டி உள்ளிட்ட மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு