முல்லை பெரியாறு அணை பிரச்சினை; தமிழக அரசு மீது பாஜ., குற்றச்சாட்டு

முல்லை பெரியாறு அணை பிரச்சினை; தமிழக அரசு மீது பாஜ., குற்றச்சாட்டு


முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறந்து தமிழக விவசாயிகள் வாழ்க்கையில் கேரளா, தி.மு.க., அரசு விளையாடுகிறது,'' என தேனியில் பா.ஜ., மாநில விவசாயிகள் அணி தலைவர் நாகராஜ் கூறினார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியதாவது: தி.மு.க., கம்யூ., காங்., நாம்தமிழர் கட்சியினர் காவிரி விஷயத்தில் அதிக போராட்டம் நடத்தினர். 142 அடி எட்டுவதற்குள் அக்.,28ல் முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவுக்கு நீர்திறந்தபோது அமைதி காத்தனர். இதை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்ததால் தமிழக அரசு நீர் திறந்ததாக அமைச்சர் துரைமுருகன் சப்பைகட்டு கட்டினார்.


முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு சார்பில் தண்ணீர் திறந்ததாக வரலாறு இல்லை. தற்போது அது மாறியுள்ளது. இதுதான் விடியல் அரசா.5 மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கையில் கேரளா, தமிழக அரசு விளையாடுகிறது. இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக சொத்துகளை விற்று பென்னிகுவிக் அணை கட்டினார். இதில் கேரளாவின் பங்கு இல்லை. விடியல் அரசு விழிக்காததால் அணை கட்டுப்பாடு தமிழகத்தை விட்டு சென்றுள்ளது.



இதை கண்டித்து நவ. 8ல் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பெரியாறு அணைப்பகுதியில் புது அணை கட்ட வேண்டியது இல்லை. நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதால் முன்கூட்டியே அணையில் கேரளா நீர் திறந்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தை நாடுவோம், என்றார்.