ஸ்டாலினின் அரசு சிறுபான்மையினர் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி பேச்சு....

ஸ்டாலினின் அரசு சிறுபான்மையினர் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி பேச்சு....

.ராமநாதபுரம் நவ-26

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அரசு சிறுபான்மையினர் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி பேச்சு.இன்றைய அரசியல் சூழ்நிலையில் எவ்வித சமரசமும் இன்றி சமுதாயத்திற்காக பாடுபடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் கட்சிகள் சமுதாய அமைப்புகளை. சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி எம்பி பேசியதாவது:- 

அனைத்து தரப்பு மக்களையும் இன்று இருக்கும் அரசியல் சூழலில் எவ்வித சமரசமும் இன்றி சமுதாயத்திற்காக பாடுபடும் ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.அதற்கு காரணம் சுயநலம் பற்றி சிறிதும் சிந்திக்காத நம் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் தாய் சபையின் தேசியத் தலைவர் பேராசிரியர் அவர்களின் சீரிய வழிகாட்டல் தான் அனைத்து தரப்பு மக்களையும் தாய்ச்சபையில் இணைத்து மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதன மூலம் சமுதாயத்திற்கு பெரும் பயன் கிடைக்கச் செய்ய வேண்டுமென்று  அவர் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு