நகர் கழக செயல்வீரர்கள் கூட்டம்

நகர் கழக செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரம் நவ-24

ராமேஸ்வரம் நகர்,  (22.11.2021) அன்று        நகர் கழக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட கழக  செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர் கழக செயலாளர்,         கே.இ.நாசர்கான் அவர்கள் வரவேற்று பேசினார்.

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இறுதியாக பேசிய மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் கழக தோழர்கள் ஒற்றுமையுடன் களம் கண்டு வெற்றியை நகராட்சி தேர்தலில் உறுதி செய்யவேண்டும். என பேசினார். நகர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு