தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

 ராமநாதபுரம் நவ- 11

ராமநாதபுரம் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் அதன் பொதுச்செயலாளர் திருமதி. பிரிசில்லா பாண்டியன்,  தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மரு.வியங்ேகால் பாண்டியன், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சேகர்,கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தீன் பாண்டியன், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில்விடுபட்ட கட்சியின் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய இந்த கூட்டம் நடைபெற்றது. தனது கட்சிக்காரர் திருமணத்திற்கு கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.ஜான் பாண்டியன் அவர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். இதனையடுத்து. ராமநாதபுரம்  மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் முனியசாமி ஆகியோர்  ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு