முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்த ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம்
ராமநாதபுரம் நவ-16
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் அவர்கள் இன்று காலை காணொலி காட்சி மூலம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூபாய் 6.815 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டுமானங்களை மேம்படுத்தி தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 21,வர்த்தகக் கடைகள் (ம) சுத்தப்படுத்தி தரம் பிரிப்பு கூடம், அலுவலக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட கட்டிடங்களை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். இதன் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சங்கர்லால் குமாவத் அவர்கள் புதிதாக திறந்து வைக்கப்பட்ட வர்த்தக கடைகளை முன்னிலை வகித்து குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார். இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் (ராமநாதபுரம்) காதர்பாட்சா முத்துராமலிங்கம் (பரமக்குடி) செ.முருகேசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். இதில் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் ஆர்.கே. கார்மேகம் (வடக்கு), டி.ஆர்.பிரவீன் தங்கம் (தெற்கு) திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.ஓ.(ஓய்வு) திரு.பி.குணசேகரன் திரு.அஹமது தம்பி, மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு