ராமநாதபுரம் , பட்டணம்காத்தான் அருகில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா.

 ராமநாதபுரம் , பட்டணம்காத்தான் அருகில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா.


ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் மெயின் ரோட்டில் பிரதான் மந்திரி பாரதிய ஜனதா மக்கள் மருந்தகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மக்கள் மருந்தகத்தை ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் (மாநில செயற்குழு உறுப்பினர்) பாஜக திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக எம்.சங்கு முத்துராமலிங்கம், கலந்துகொண்டு சிறப்பித்தார். முதல் மருந்து விற்பனையை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் லெட்சுமி மருத்துவமனை மருத்துவர் மனோஜ் குமார் பாஜக மாவட்ட தலைவர் கே.முரளிதரன் ஆகியோர். முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். இதில்மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஒன்றிய தலைவர் முருகேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் முனீஸ், மாவட்ட துணைத்தலைவர் பி. நாகேந்திரன் மற்றும் காளீஸ்வரன். பிரபாகரன், நடராஜன், சிவசங்கர், பரமேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நன்றியுரை கடையின் உரிமையாளர்  காளிதாஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.    ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு