தமிழக சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.805.92 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக  சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.805.92 கோடி நிதி ஒதுக்கீடு

 தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ.805.92கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்புறம், கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 19 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.19 மாநிலங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரத்துறை மானியமாக ரூ.8,453.92 கோடி நிதி அமைச்சகத்தின் செலவின துறை வெளியிட்டுள்ளது. 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மானியங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.805.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.