இந்தியவிலேயே 5 ஏழை மாநிலங்கள் இதுதான்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

இந்தியவிலேயே  5 ஏழை மாநிலங்கள் இதுதான்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!


இந்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் அமைப்பு வெளியிட்டுள்ள வறுமைக் குறியீட்டின் படி இந்தியாவிலேயே மிகவும் பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலத்தை மிகவும் ஏழை மாநிலமாக அறிவித்துள்ளது./*

*இதிலும் குறிப்பாகப் பீகார் மாநிலத்தில் 50 சதவீத மக்கள் Multidimensionally Poor பிரிவில் உள்ளதாக நித்தி அயோக் வறுமைக் குறியீடு தெரிவித்துள்ளது.*

*இதேபோல் ஏழை மக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு உள்ள குறிப்பிடத்தக்கது*.

*வறுமைக் குறியீடு*

*நித்தி அயோக் அமைப்பு வெளியிட்டுள்ள வறுமைக் குறியீட்டின் படி பீகார் மாநிலத்தில் 51.9 சதவீத மக்கள் ஏழ்மையில் உள்ளனர், இதைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 42.16 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 37.79 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 36.35 சதவீதமும், மேகாலயா மற்றும் அச்சாம் மாநிலத்தில் தலா 32.67 சதவீத மக்களும் ஏழ்மையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.*

*தமிழ்நாடு*

*இதேபோல் ஏழை மக்கள் குறைவாக இருக்கும் மாநிலத்தில் கேரளா, கோவா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை டாப் 5 இடத்தைப் பிடித்துள்ளது.*

*கேரளா மக்கள் தொகையில் 0.71 சதவீதமும், கோவா-வில் 3.76 சதவீதமும் , சிக்கிம்-ல் 3.82 சதவீதமும், தமிழ்நாட்டில் 4.89 சதவீதமும், பஞ்சாப்-ல் 5.59 சதவீத மக்கள் மட்டுமே ஏழ்மையில் உள்ளதாக அறிவித்துள்ளது.*

யூனியன் பிரதேசம்

*இதேபோல் யூனியன் பிரதேசம் பிரிவில் புதுச்சேரியில் 1.72 சதவீத மக்கள் தொகையும், லட்சத்தீவில் 1.82 சதவீத மக்கள் தொகையும், அந்தமான் நிக்கோபார் தீவில் 4.30 சதவீத மக்கள் தொகையும், டெல்லியில் 4.79 சதவீத மக்கள் தொகையும், சண்டிகர்-ல் 5.97 சதவீத மக்கள் தொகை ஏழ்மையில் உள்ளதாக அறிவித்துள்ளது./*

*Multidimensionally Poor பிரிவு*

*Multidimensionally Poor பிரிவை மத்திய அரசு 2015-16 குடும்ப ஆரோக்கிய ஆய்வின் படி பிரித்துள்ளது. இதன் மூலம் மத்திய மாநில அரசுகள் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்தை இப்பிரிவு மக்களுக்காக அளிக்க முடியும் என்பது தான் மத்திய அரசின் திட்டம்.*

MPI அளவீடு

*இந்தியாவின் MPI அளவீட்டைச் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் என 3 பிரிவுகளாகச் சம பங்கு உடன் பிரிக்கப்பட்டு உள்ளது. இதை ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் என 12 துணை பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறது.*

நித்தி அயோக் அமைப்பு

*இந்தியாவின் MPI அளவீடு நாட்டின் Multidimensionally Poor அளவீடு குறித்து முழுமையான புரிதலைக் கால அடிப்படையில் அளிக்கும். இனி வரும் காலத்தில் இத்தரவுகளை வைத்து நாட்டின் ஏழமையைச் சிறப்பான முறையில் கையாள முடியும் என நித்தி அயோக் அமைப்பு அறிவித்துள்ளது.*