பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் மனு

 பருவ மழையால் பாதிக்கப்பட்ட   விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்  பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் மனு

 


வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

 கிருஷ்ணகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 

மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயச்சந்திரபானு ரெட்டியை. சந்தித்து மனு அளித்தனர.

இதுகுறித்து  துணைப் பொதுச் செயலாளர் இளங்கோ தெரிவிக்கையில் வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் பெய்து வரும் கனமழை காரணமாக மழை வெள்ளம் விவசாய நிலங்களில் புகுந்து மாவட்டத்திலுள்ள விவசாய பயிர்கள் முக்கியமாக நெற்பயிர்களை மூழ்கடித்து உள்ளது

இதனால் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுவரை 90 சதவீதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது

 இதனால் மாவட்டத்தில் ஒரு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள்  பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்

இந்த நிகழ்வின் போது ஐம்பதிற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்