10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – டிச.4 கடைசி நாள்!

10, 11ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – டிச.4 கடைசி நாள்!


தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இதனை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்து உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் பொதுத்தேவு எழுதும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விபரங்களையும் EMIS தளத்தில் பதிவேற்றுமாறு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மே மாதம் பொதுத்தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே EMIS தளத்தில் அனைத்து மாணவர்களின் விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்து மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அதனை சரியாக பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மதிப்பெண் சன்றிதழில் அவர்களது விபரங்கள் EMIS தளத்தில் இருந்தே எடுக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது. அதனால் EMIS தளத்தில் மாணவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட 12 விபரங்களை பதிவேற்றும் பணியினை வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் அவர் கடைசியாக படித்த பள்ளியின் விபரம் மற்றும் பயிற்று மொழி மட்டுமே இடம் பெற்றிருந்தது. நடப்பு ஆண்டு முதல் அனைத்து பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களிலும் 1ம் வகுப்பு முதல் அவர் பயின்ற பள்ளிகளின் விபரம் மற்றும் பயிற்று மொழி சேர்க்கப்பட உள்ளது. ஏனெனில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளததால் மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் தமிழ்வழி பயின்ற சான்று பெற அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்கும் விதமாகவே இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.