நவம்பர் முதல் தேதி பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை; அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...

நவம்பர் முதல் தேதி பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை; அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...


தமிழகத்தில் வரும் நவ.1 ம் தேதி பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சிலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தீபாவளிக்கு பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

 அதனால் பள்ளிகள் வரும் 1ம் தேதி கட்டாயம் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்   உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் கடந்த செப்.1ம் தேதி 9 – 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் தலைமையில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் ஆலோசனையின் முடிவாக நவ.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை சிலர் வேண்டுமென்றே எதிர்த்து வந்தனர். ஒரு சிலர் அடுத்த 2 நாட்களில் தீபாவளி வருவதால் தீபாவளி முடிந்த பிறகு பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார். .அவர்களுக்கு வருடம் முழுவதும் தீபாவளி வரவேண்டும் என்கிற வேண்டுதல். பணி ஓய்வு பெறும் வரை லீவு விட்டால் கூட சந்தோஷமாகத் தான் இருப்பார்கள்.

இவர்கள் யாருக்கும் செவிசாய்க்காமல் முதலமைச்சர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதை தெரியப்படுத்தி வருகிறார். அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு முகக்கவசம் இருப்பு, சானிடைசர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  நேற்று செய்தியார்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் வரும் நவ.1ம் தேதி திறக்கப்படுவது உறுதி என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 31 ஆயிரம் பள்ளிகளில் 34 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களின் கற்றல் நிமித்தமாகவே இந்த பள்ளிகள் திறக்கும் முடிவு. ஆனால் மாணவர்கள் வருகை கட்டாயம் இல்லை. பெற்றோர்கள் விரும்பினால் தீபாவளி முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களது கற்றலை மேம்படுத்தும் விதமாக ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்பு மாலை 5 மணி முதல் 7 மணிவரை நடத்தப்படும். அவ்வாறு கற்றலை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் இந்த வகுப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுத்தியுள்ளார்.