மாவீரன்_மருதநாயகம்_கான்சாகிப் புகழ் போற்றும் மாபெரும் கருத்தரங்கம்
சுதந்திரப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப்போராடி உயிர்நீத்த உயிர்த்தியாகி ; மதுரையை ஆண்ட தமிழ் மாமன்னன் #மாவீரன்_மருதநாயகம்_கான்சாகிப் புகழ் போற்றும் மாபெரும் #கருத்தரங்கம் SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் இன்று (17-10-2021) காலை 11:00 மணியளவில் பரமக்குடி ஸ்ரீராகவேந்திரா மஹாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் N.K.S.பரக்கத்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.சுல்தான் அலாவுதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் மௌலவி I.மீரான் முஹைதீன் மன்பஈ, மாவட்ட பொருளாளர் V.K.A.ஹமீது சுல்தான் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.ரஷீத்கான் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.ராஜா முஹம்மது, மாவட்ட வர்த்தக அணி தலைவர் V.S.நஸீர் ஹுசைன் , SDTU மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப் , சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் N.தீன்ஸ்கான் , மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் P.அப்துல் அஜீஸ் , மாவட்ட மீனவரணி ஒருங்கிணைப்பாளர் A.ரெனால்ட் , பாப்புலர் ஃப்ரண்ட் முதுகுளத்தூர் வட்டார தலைவர் N.அண்ணல் முஹம்மது மற்றும் WIM அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.ஜரீனா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் J. நூருல் அமீன் அவர்கள் துவக்கவுரையாற்ற, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சி தமிழ்மாநில பொதுச்செயலாளர் அ.ச.உமர் பாரூக் மற்றும் தி்முக மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர் இரா.ராஜீவ் காந்தி ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.ராஜிக் ரஹ்மான் அவர்கள் நன்றியுரையுடன் கருத்தரங்க நிகழ்வு இனிதே நிறைவுற்றது.