முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்காக சென்னை வரும் லண்டன் டாக்டர்கள்...!
பல முறை லண்டன் சென்று சிகிச்சை பெற்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த ஆண்டு சிகிச்சைக்காக லண்டன் செல்ல அவர் முயற்சிகள் எடுத்தபோது கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்ததால் அந்தப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது
இந்த பரபரப்புகளுக்கு இடையேயும், தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு அதையும் கவனமாக பின்பற்றுகிறார்.
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான பயணத்தை தவிர்த்து வந்த ஸ்டாலின் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக லண்டன் செல்ல உள்ளதாகவும் அப்படியே சிகிச்சை மேற்கொண்டு திரும்புவதாகவும் ஜூன் மாதத்திலேயே ஒரு தகவல் பரவியது. ஆனால் கொரோனா பயம் விலகாத சூழலில் முதல்வர் சர்வதேச பயணம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அத்துடன் ஊரக உள்ளாட்சி தேர்தல், ஜனவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நிறைவேற்ற வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் என பல்வேறு பணிகள் இருப்பதால் லண்டன் செல்லும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
ஆகையால் லண்டன் மருத்துவர்களை சென்னைக்கு வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.