ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டைஊராட்சி தலைவர் பதவியேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டைஊராட்சி தலைவர் பதவியேற்பு


ராமநாதபுரம் அக்-20

ராமநாதபுரம் மாவட்டம். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் தேர்தல் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று வேட்பாளர் திருமதி.யாழினி இன்று தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில் இன்று காலை சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக அனைவர் முன்னிலையிலும், பதவியேற்றுக்கொண்டார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் பதவி ஏற்பு விழாவை நடத்திவைத்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் ராமநாதபுரம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் காரிக்கூட்டம் முஹம்மது பைசல் கான் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை சக்கரக்கோட்டை ஊராட்சித் தலைவருக்கு தெரிவித்துக்கொண்டார்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு