சபரிமலைபக்தர்களுக்கு குட் நியூஸ்: சபரிமலை செல்ல இவர்களுக்கும் அனுமதி: தேவஸ்வம் போர்டு தகவல்.

 சபரிமலைபக்தர்களுக்கு குட் நியூஸ்: சபரிமலை செல்ல இவர்களுக்கும் அனுமதி: தேவஸ்வம் போர்டு தகவல்.


சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க எந்த பாதையில போறது ரொம்ப ஈஸி 

“கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கொரோனா காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வர பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளோம்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கடந்த மாதம் நாளொன்றுக்கு 25 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்தோம். ஆனால், வெள்ளம் காரணமாக பக்தர்களை அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, வரும் நவம்பர் 16ம் தேதிமுதல், கார்த்திகை மாதத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

அப்படி வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை விலக்கி, நவம்பர் 16ம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.

கார்த்திகை மாதத்தில் இருந்து சன்னிதானத்தில் அபிஷேகம் செய்வதற்கான நெய்யை பக்தர்கள் நேரடியாக வழங்கலாம். பக்தர்கள் தங்குவதற்கான வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளோம். முன்பு இருந்தது போலவே பம்பா வரை போக்குவரத்துக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளோம்” என அவர் கூறினார்.

தேனி மாவட்ட செய்திக்காவெள்ளைச்சாமி