தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த வேண்டி வேலூரில் மாபெரும் கருத்தரங்கம்

 தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த வேண்டி வேலூரில் மாபெரும் கருத்தரங்கம்


 தேசிய கல்வியாளர் பேரவை. . திட்டமிட்டபடி வருகின்ற 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சரியாக 10 மணி முதல் ஒரு மணி வரை வேலூர் ஜி ஆர் டி ஹோட்டல் கலை அரங்கில்     புதிய தேசிய  கல்விக் கொள்கையை உடனே தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும்நீண்ட நெடுங்காலமாக நிலுவையில் உள்ள நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும்மும்மொழி கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற மிக முக்கிய மூன்று கோரிக்கைகளை மையப்படுத்தி தமிழ்நாடு முழுக்க அனைத்து மாநகராட்சி தலைநகரங்களிலும் கருத்தரங்கங்கள் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து மேற்கண்ட கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்வது என்கிற லட்சியத்தோடு தேசிய கல்வியாளர் பேரவை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு தேசபக்தியும் தெய்வபக்தியும் மிக்க  கல்வியாளர்களை ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றது.

இந்த கருத்தரங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தலைமை வகிக்கிறார் பேராசிரியர் கனகசபாபதி கோவை பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் வரவேற்புரை ஆற்றுகிறார்.

விஐடி பல்கலைக் கழகத்தின் தலைவர் ஜி விஸ்வநாதன், மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், அர்ஜுன் சம்பத் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். சிருஷ்டி பள்ளி குடும்பத்தின் தலைவர் சரவணன் நன்றி உரை ஆற்றுகிறார்.

முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம் என்றும் முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகி விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டபடி நமது கருத்தரங்கை நடத்துவோம்.....

 ஒவ்வொரு கல்வியாளர்களும் ஒவ்வொருவரை தவறாமல் அழைத்து வர வேண்டும் உங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

 அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

 வாருங்கள் கோட்டை மாநகரம் வேலூருக்கு என்று உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி விழாக் குழுவின் சார்பில் அன்போடு வரவேற்கின்றோம். என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் 

மற்றும் விழாக்குழு தலைவர். நல்லாசிரியர்.எம். எஸ்.. சரவணன் ஆகியோர் கல்வியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.