ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

 ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக 20 பேர் காயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணவாய் பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பேருந்து கணவாய் பகுதி அருகே செல்லும்போது எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தின் பக்கவாட்டின் மீது மோதியது. இதனால் பேருந்துகளின் இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த 108ஆம்புலன்ஸ் காயமடைந்தவர்களை உடனடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவாய் பகுதிகளில் இரண்டு பகுதியிலும் மரங்கள் அடர்ந்திருப்பதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் மற்றும் மலைப்பகுதியில் பனிமூட்டம் காரணமாகவும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும் இப்பகுதி சாலையோர மரங்களை அகற்றுவதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியம் என்ற கருத்து நிலவுகிறது.

தேனி மாவட்ட செய்திக்காக வெள்ளைச்சாமி