கிருஷ்ணகிரி நகராட்சியில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை.... நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?
கிருஷ்ணகிரியில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி நோய் பரப்பு கூட்டமாக மாறிய சாலையில்
பல ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்லும் அவலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர் புகார்.
உடனடி நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்.
கிருஷ்ணகிரியில் பஸ் நிலையத்தில் இருந்து தலைமை தபால் நிலையம் உள்ள கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண் 30 பெரியசாமி பிள்ளைதெரு உள்ளது இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவு நீர் கசிந்து சாலைகளில் வெள்ளம் போல் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்
மேலும் பழைய பேட்டை பழைய பஸ் நிலையத்திலிருந்தும். பழையபேட்டை மற்றும் கிராமங்களிலிருந்தும் இருந்தும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் தேங்கும்சாக்கடை கழிவு நீரில் நடந்து செல்வதாகவும்.
பலமுறை இதுகுறித்துபுகார் தெரிவித்தும்.
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ஏ. லலித் ஆண்டனி தெரிவிக்கையில் :
அன்னை பாத்திமா மேல்நிலைப் பள்ளி. அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் என வந்து செல்லும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த சாலை வழியாக தினமும் கழிவுநீரை மிதித்துக்கொண்டு தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். கொரோனா நோய்ஊரடங்கு காலமானஇந்த நேரத்தில்.
ஆபத்தான சூழ்நிலையில் பள்ளி குழந்தைகள் சாக்கடையை மிதித்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதால் நோய்பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டுமெனவும் இதே நிலை நீடித்தால்
நான்கு மேல்நிலை பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் எனவும் குழந்தைகள் ஆரோக்கியம்தான் முக்கியம் எனவும் மேலும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஏ. செல்லக் குமார் தலைமையில் மிகப்பெரிய போராடம் நகராட்சி முன்பு நடைபெறும் என தெரிவித்தார்.
உடன் எஸ்சி எஸ்டி துறை அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சபீர் , மாவட்ட ஊடக பிரிவு தலைவர் கமலக்கண்ணன், நகர துணைத்தலைவர் இருதயம் , ரிச்சர்ட் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.