கிராமசபை கூட்டத்தில் தென்போஸ்கோ அன்பு இல்லத்தின் பணியாளர்கள்

கிராமசபை கூட்டத்தில் தென்போஸ்கோ  அன்பு இல்லத்தின் பணியாளர்கள் 


காந்தி ஜெயந்தியான இன்று 02.10.2021 சேலம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் 'கிராம சபா' கூட்டமானது நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் குழந்தைகளின் நலனுக்காக  கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தொண்டு நிறுவனமான தென்போஸ்கோ அன்பு இல்லத்தின் பணியாளர்கள் சன்னியாசி குண்டு, எருமாபாளையம், பாளகுட்டை, வாழப்பாடி, ஆண்டிப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் நடந்த 'கிராம சபா' கூட்டங்களில் கலந்துகொண்டனர்.  அதில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இளம் வயது திருமணம் தடுப்பு பற்றிய உறுதிமொழிகளை கூறியதோடு, கிராம பஞ்சாயத்து அளவில் குழந்தைகளுக்கு யாரெல்லாம் எவ்வாறு உதவலாம் என்றும் சைல்டு லைன் 1098 முக்கியத்துவம் பற்றியும் கிராம தலைவர், மற்ற துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்களுக்கு விளக்கி கூறினர்.