தேனி மாவட்டம் கம்பத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு...

தேனி மாவட்டம் கம்பத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு...


தேனிமாவட்டம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜனகர் ஜோதிநாதன், மதன்குமார், மணிமாறன், சுரேஷ் கண்ணன் ஆகியோர் கம்பம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கம்பம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை செய்தபோது அங்கு குளிர்சாதன பெட்டிகளில் கெட்டுப்போன இறைச்சி, மற்றும் உணவுகள் இருந்துள்ளது.

இதனை பார்த்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அவற்றை அழித்துள்ளனர். இதனை அடுத்து கம்பம் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் நடத்திய சோதனையில் ஆடு, மாடுகளின் தோல்களை பதப்படுத்தி வைக்கும் உப்பு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இத்தகைய கெட்டுப்போன இறைச்சி வகைகள் மற்றும் உணவு வகைகளை குளிர்பதன பேட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்வதால் அந்த உணவுகள் விஷமாக மாறிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே உணவகங்களில் தரமான உணவுகளை தயாரிக்க வேண்டும் என்றும் ஒரு நாளுக்கு மேல் அந்த உணவுகளை வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைப்போல் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்ட செய்திக்காக வெள்ளைச்சாமி